ForeverMissed
Large image
His Life

அன்பு மகனே !

February 23, 2021
அனைவருக்கும் வணக்கம்.  சுருக்கமாய் சொல்வேன்.
என் வாழ்வில் சுவையாக வந்தவனே !
விண்ணில் மின்னும் தாரகை வீட்டில் இறங்கி வந்தது போல் வந்து பிறந்தான் எங்கள் மகன் வளமாக எங்களை வாழ்விக்கவே !
மகிழ்ச்சியில் திளைத்தோம் மகன் பிறந்தான் என்று !
செல்வன் பிறந்தான் என்று சிரிப்பாக நின்றோம். சிரிப்பு நிறைந்தது .
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய், புன்னைகை மன்னன் பொலிவுடன் வளர்த்தான்.
சிலர் இவன் முருகனின் அம்சமாய் பொலிவுடன் உள்ளான் என்றார். சிலர் ஹரியும் ஹரனும் சேர்ந்த உருவம் தான் என்றார். இரண்டும் சேர்ந்த எடுப்பான பெயர் என்ன ? ராமலிங்கம் என பெயர் சூட்டினார் பெரியோர்.

ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கில கல்வி அழகுற கற்றான். ஆறாம் வகுப்பு ஆங்கில கல்வி அவ்வூரில் இல்லை என என்ன செய்வதென்று ஏங்கி நின்றோம்!  "அப்பா! கலங்காதீர் ! கடலூர் சென்று கனிவுடன் படித்து மீண்டு வருவேன் பேருந்தில்" என்றான். காலையில் அவனை கவனமாய் அனுப்பி மாலை வரும்வரை மயங்கி நிற்போம்.
மாலையில் மன்னவன் வருவான். என்னவன் வந்தவனை ஏந்தி கொள்வோம் .புத்தக பையை ஏந்தி ஒரு விரலை உரிமையுடன் பற்ற, ஊற்றெடுக்கும் உற்சாகம் என்னுள். ராஜ நடை தொடர நடந்திடுவோம் வீடு வரை!
பன்னிரெண்டாம் வகுப்பு வரை பாங்குடன் கற்றிட்டான்.

அடுத்து என்ன படிப்பது?
ஆராய்ந்த போது பொறியியல் கல்வி போவதென முடிவு இன்முகமாய் ஏற்றான். பத்தொன்பதாம் வயதில் பரிதவிக்க விட்டு வந்தேன் பீஹார் மாநிலம் ஜாம்ஷெட்ப்பூரில். "அப்பா கலங்காதீர் ! அறிவுடன் முடித்து வருவேன் . சென்று வாருங்கள்! ஜெயமுடன் வருவேனென்றான்".
விரும்பிய கல்வி கற்று வெற்றியுடன் திரும்பி வந்தான். ஒரு மாதம் கூட ஒன்றாக இல்லை அவன். வேலை தேடி செல்கின்றேன் என்றான். வேலவன் துணை இருப்பான் என்று சொன்னேன்.
எங்கோ சென்றான். எடுத்தேன் ஒரு வேலை பாண்டியில் என்றான். சில நாள் வேலை.
"மும்பை சொல்லட்டுமா" என்றான். "சென்று வா மகனே!" என்றேன். சில நாள் அப்பா ஹைதெராபாத் வந்து விடுகிறேன் என்றான் அருமை மகன். இடைப்பட்ட நாட்களில் இரண்டு பட்டங்கள் வாங்கி இருந்தான் "Master of Foreign Trade", "Master of Retail Management" என.  

அவனுக்கோ அகவை ஏறுது. அகமுடையாள் தேவை. மணமுடிக்க ஒரு வசந்தத்தை தேடி பார்த்தோம். இனிதே மணம் முடித்து பெங்களூரில் இல்லறம் புகுந்தார்கள்.
அன்றொரு நாள் என்னிடம் வந்து "அப்பா எனக்கு வேலை வந்திருக்கிறது இரண்டு நாடுகளில்  பிரிட்டன் மற்றும் USA. எங்கு செல்லட்டும்" என்றான். "பாரில் சிறந்த நாடென்று பல்லோரால் போற்றப்படுவது USA . வாழ்வில் முன்னேற வழி கிடைக்கும்" என்றேன்.சென்று வா என்றேன்.சிந்திக்கவில்லை.  சிரணியில் ஏற்றான்.
வந்தான் இங்கு வாழ்வில் உயர. அப்பாவின் சொல்லுக்கு தப்பாமல் செவி சாய்த்தான். சான் ராமோனில் சிறந்த வீடு வாங்கினோம். வாருங்கள் அப்பா வாழ்த்துங்கள் என்றான். அன்பு மகனின் ஆனந்த இல்லம் காண ஆசையுடன் ஓடி வந்தோம். மகன்,மருமகள், பேரன் கண்டு பேருவகை கண்டோம்.அவ்விடம் மகிழ்ச்சி அன்பான, ஆதரவான, அழகான நண்பர் கூட்டம் கண்டேன். நானே வியப்பு கொண்டேன்.இப்படி நண்பர் கூட்டம் இது வரை நான் கண்டதில்லை. ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து உரிமையுடன் பழகும் உதாரண கூட்டம். குடும்பமாய் பழகி குதாகலிக்கும் கூட்டம்.
அன்பு மகனை ஆதரிக்க அத்துணை பேர் உள்ளார்கள் எனக்கென்ன கவலை என்று என்நாடு திரும்பி விட்டேன். கூற்றவனின் கெடு மதியை யார் அறிவார் ? New York சென்று விட்டான். சில நாட்கள் சிறு நோய் கொண்டு அவனை வாட்டியது. கண் மூடி திறப்பதற்குள் காட்டி விட்டான் காலன் அவன் வேலையை .மகனை பறித்திட்டான். பாழ் குழியில் தள்ளி விட்டான் எங்களை. தரணியாம் இவ்வுலகில் தனிமரமாய் நிற்க வைத்தான். என் மகன் எப்போதும் ஏங்குவான். வெங்காயம் இவ்வாழ்க்கை.தோலுரித்து பார்த்தால் தோன்றாது ஒன்றுமே! மேலே பார்த்து மெத்தனமாய் வாழ்த்திருப்போம் என சென்று விட்டான் எங்கள் மகன்.சென்ற இடம் தேடி செல்ல துடிக்கின்றோம் செல்ல வழியின்றி செயலின்றி நிற்கின்றோம்.இறுதியாய் கேட்கின்றோம் இறைவா ! எங்கள் மகனை தந்து விடு! தரமாட்டாய் ! யாமறிவோம் .. எடுத்ததை குடுத்து பழக்கமில்லை உமக்கு ..
எடுத்துச்செல் எங்களை .. எங்கள் மகன் இன்முகம் காண .. வணக்கம் 

- திரு.மணிவாசகம்  (ராமலிங்கத்தின் அப்பா )

My Mama!!

February 22, 2021
Lot of people know Ram as a great friend, brother, caretaker, helpful volunteer, infectious smiling face, great listener and leader, but I have the privilege to know him as my Mama (brother-in-law in Tamil). I shared some amazing memories with him over the last 17 years. There are one too many stories to share about him, I don't even know where to start. 
Ram had a very simple upbringing. He was born in Bahoor, a small suburban town outside of Pondicherry in India, and went to  public schools. He attended Regional Engineering College, Jamshedpur, and graduated in Mechanical Engineering. During college, he played volleyball at national level. He loved volleyball and he is damn good at it! After graduation, he worked at many engineering firms like Unilever, Supreme Industries and Blue Star, before moving to multi national companies and IT sphere. Ram is very sincere at work and he works very very hard. He always told me he never had big career ambitions, he wanted a simple life and live closer to home. That being said, he didn't want to move to United States at all. He was happy back home. But since moving to the US 16 years ago, he made some extraordinary career moves as opportunities presented itself to him. He had bigger roles at his previous jobs at Levi's, Infosys, Bristlecon, and most recently at Bloomberg. He is a true testament for American dream and he lived a wonderful life, but yet a simple and humble one. It is rare to find people like him, so simple and down to earth. These days we see a lot people who act as if they are privileged, but don't have even 5000 bucks in their bank account. Ram is an exception, a true genuine exception.
To me personally as my mama, he taught me a lot.  First and foremost, he taught me to drink scotch whiskey. I can devote my love of a good scotch to him. He told me to take life as it goes and not to go deep. His exacts words are - "Life is like an onion, if you start peeling it, there is nothing left inside." Ram doesn't ask for much and he never ever complains about anything, he would expect the same from me. 
Just as my finishing thoughts, I know he left the world, but he didn't leave me. I feel him very close to me and my heart. He being not with us physically is a great loss to me, and I don't think I can fill his shoes. No one in my family can fill his shoes, but I will try hard. I will see him in everything he likes and loves - Starbucks coffee, volleyball,  South Indian food, Johnny Walker, Tamil movies (Panchatanthiram, Kaathala Kaathala, Vasool Raja) and his son, Arya.
I will love you forever, Mama.... Arul