ForeverMissed
Large image

This memorial website was created in memory of our loved one, Indran Shanmugalingam, 52, born on January 20, 1963 and passed away on February 8, 2015. We will remember him and his great achievements forever.

February 8, 2018
February 8, 2018
அண்ணா உங்களை நினைக்காத நாள் இல்லை
இன்று எம் வாழ்நில் மறக்க முடியாத நாள் மீன்றும்
எம் முன்னே வர மாட்டீங்களா? உங்கள் பண்பானா
அறிவுரைகளின் படியே நாம் வாழ்கிறோம்.
உங்கள் : அரபாத்,கவிதா.
January 21, 2017
January 21, 2017
We will miss you Indran Anna. You will always be in our thoughts and in our heart. We love you so much for your caring and affection most of all being there when anyone need help.
January 20, 2017
January 20, 2017
Dominic you are ever with your loving wife& daughter and guide them your memories. No death to you Dominic
February 10, 2016
February 10, 2016
Dom Anna

You watched out for me and were my friend in the days of old. Until we meet again, I will watch out here!!!! Always your grieving friend.
January 20, 2016
January 20, 2016
Hi Indiran, I know we can't see you, I know you expect the birthday wishes, Happy Birthday, I can imagine the smile on your face.
Loving cousin
Uddy XXX
April 14, 2015
April 14, 2015
எமது ஒப்பற்ற தலைவனின் வழிகாட்டலில் ..
அரசியல் நீதி நிர்வாகம் என ஆளுமை
ஞானம் கொண்ட வித்தகளாய்
நீ வலம் வந்த அந்த நாட்கள் எம்
மனக் கண்ணில் நந்தனமாய் ஆடுதையா ..உனை நாம் எனி எங்கு காண்போம் ..ஒயாத கடல் அலை ஓன்று மௌனித்து உறங்குது இன்று
உன் முஉச்சு காற்றும் தமிழ் மணம் வீசும் ..சற்று ஒய்வு எடுங்கள் நாளைய விடியலுக்காய் ..
நன்றி நாவலர்மடம் நெல்லியடி மக்கள்
March 15, 2015
March 15, 2015
ANNA...For me he was a kind and generous man who offered without expecting repayment,his love for his family was extra ordinary and a blessing. As much as it was a pain to los him I feel there is need for us to let him rest,while he waits for us to join him as he would say." I AM WAITING FOR YOU TO SHARE A CUP OF TEA WITH ME" I pray he is in a happy place now and would like for us to celebrate his life and what he shared with us.
March 12, 2015
March 12, 2015
"மனிதர்க்கு பிறப்பையும், இறப்பையும்
நிரந்தரமாக்கிய இறைவன் - கூடவே
அவர்களின் நினைவுகளையும்-பிறரிடத்தில்
நிரந்தரமாக்கியிருப்பதுவும் சிறந்ததே.."

Indran uncle,
We will keep your kind memories forever, even You are not with us now.
March 11, 2015
March 11, 2015
kannil uyirai vaithukondu
indru kaatril kalanthuvittaai Anna
intha mannil ungalai pol
ini yarai naangal kanbom. Enrum umami maravoom .unkal Arafat and Kavitha .
March 11, 2015
March 11, 2015
Indran Anna!

I unable to say words.....& I am not believe you are not with us !
March 10, 2015
March 10, 2015
நேசித்த உறவே

நீ மீளாத்துயில் கொண்டு ஒரு மாதம் ஆகிவிட்டது. எல்லாம் நேற்றுப் போல் இருக்கிறது. இந்திரன், என்றும், டொமினிக் என்றும் இரு நாமங்களில் நீ என்னுடன் வலம் வந்திருக்கிறாய்.

உன் உயிர்த் தோழன் இராஐன் கதிரவேலுவை சிங்களம் அடித்து வீழ்த்தி காயப்படுத்தி எரியும் நெருப்பில் தூக்கியெறிந்து உயிருடன் எரித்துக் கொன்றபோது நீ தேசியத்திற்காக எழுந்தாய்.

அதுவே உன்னை புலிவீரனும் ஆக்கியது. தந்தையிழந்த குடும்பத்தில் தலைமகன் நீ குடும்பப்பொறுப்பு பெரிதாக நெருட இரண்டு சகோதரிகளை நினைத்து கலங்கியவாறே நீ தேசியப் பயணத்திற்காக புறப்பட்டது எனக்கு மட்டும் தெரிந்த உனது வேதனை.

எனது தந்தை நீ நேசித்த குணமாமா என்றும் சொல்லுவார் வாழ்க்கை வாழ்வதற்கல்ல வாழ்ந்து காட்டுவதற்கு என்பார். நீ உனது வாழ்க்கையை ஒரு உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து காட்டியிருக்கிறாய். அதுவே நீ வாழ்ந்த வாழ்க்கையின் பெருமை.

பல்வேறு காலகட்டங்களிலும் உனக்குள் பல்வேறு வேதனைகள், ஆனால் அது அனைத்தையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் உன்னைச் சுற்றி இருப்பவர்களை கலகலப்பாக வைத்துக் கொள்வதே உன் தனி சாமர்த்தியம்.

வெளிநாட்டு தொடர்பக பொறுப்பாளர், திருகோணமலை அரசியல் துறைப் பொறுப்பாளர், யாழ். மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர், தமிழீழ நிர்வாகத்துறைப் பொறுப்பாளர் என உன்னை உன் திறமை சார்ந்து உயர்த்தி அழகு பார்த்தது தமிழீத் தேசியத்தலைமை.

86இல் நீ சென்னை வந்தபோது, உன்னை அழைத்து, என்னை பொறுத்தவரை அமைப்பு 50 சதவீதம் தான் சரியான பாதையில் போகிறது, அமைப்பின் முக்கியமான நீங்கள் இதனை உணர்ந்து நடந்து கொண்டால், நாங்கள் மேலும் சரியான பாதையில் செயல்பட முடியும் என்று தேசியத் தலைமை கூறியதை முழுமையாக உணர்ந்து, அதற்கேற்றவகையில் மக்கள் சேவகனான இறுதிவரை எந்த சலனமுமின்றி பயணித்தாய்.

யாழில் இருந்து மட்டக்களப்பு வரை உன்னுடன் பயணித்த அனைத்து உறவுகளுக்கும் உற்ற சகோதரனாய் எவ்வாறு பயணித்தாய், அவர்களும் உன்னை எவ்வளவு நேசித்தார்கள் என்பதை உனது இறுதி வணக்கத்தின் போது பார்த்து பெருமிதம் கொண்டேன்.

அனைத்தையும் துறந்து மக்களுக்காக தங்களை அர்ப்பணிக்க வந்தவர்கள், டொம் அண்ணை பொறுப்பெடுத்த பின்னர் தான் நாங்கள் காவலரண்களில் மூன்று நேரமும் ஒழுங்காக சாப்பிட்டோம் என்று கூறிய போது எனக்குள் நீ எங்கோ உயர்ந்து விட்டாய்.

இறுதி நாட்களில் எப்போதோ உன் நினைவு தப்பியபோது, மல்லாவியில் சண்டை நடக்கிறது, தீபன் இந்தப்பக்கத்தால் இறங்கு என்றாயாம். கேட்டு நான் நொருங்கிப் போய்விட்டேன். தமிழீழ அன்னை மீது கொண்ட இந்த ஓலம் இன்று எத்தனை பேருக்குப் புரியும்.

உன் உற்றதுணை சுகுணா பற்றியும் நான் சொல்லியே ஆக வேண்டும். உங்கள் இருவரின் நேசமும் ஒரு கவிதை. தமிழீழ நீதியாளராக மட்டுமல்லாது ஒரு உற்ற துணையின் உச்சமாகவும் திகழ்ந்தவர் சகோதரி சுகுணா. நீ நிறையவே கொடுத்து வைத்தவன். ஒரு மூத்தவர் சொன்னார் சுகுணா உன்னைப் பார்த்துக் கொண்டது போல் யாரும் தன் கணவனை பார்த்திருக்க மாட்டார்கள் என்று. சகோரங்களாக இருக்கட்டும், உற்றார் ஆக இருக்கட்டும் அனைவரின் இதயங்களிலும் நீ எங்கோ உயர்ந்து நிற்கிறாய்.

உன் செல்வமகள் எழினி உன் கனவை நனவாக்க திடசங்கர்ப்பம் பூண்டுள்ளாள். பெருமையாக இருக்கிறது. அவளுக்கு உறுதுணையாக நிற்பது தற்போது எங்கள் அனைவரின் தலையாய கடமை.

உறவே இந்திரா! என் குடும்பத்தில் பெருமை நீ. உறங்கு.. நிம்மதியாக உறங்கு... வலிகளில் இருந்து விடுதலையாக நிம்மதியாக உறங்கு...

மீண்டும் நீயும் நானும் சந்தித்துக் கொள்வோம்...

அப்போது நிறையவே பேசுவோம்...

உன்னால் பெருமை பெற்று நிற்கும் - நேரு
March 8, 2015
March 8, 2015
இந்திரன் சண்முகலிங்கம் (டொமினிக்)
அந்த நினைவுகள்
எப்படி மறக்கும்
அஞ்சாமை அகற்றி
ஆணவம் நீமிர்த்தி
நெஞ்சில் துணிவோடு
நிமிர்ந்த நேரங்கள்
வண்டி ஏறி
கடலைக் கடந்தும்
எண்ணில் அடங்கும்
இயக்கப் பெடிகளும்
எத்தனை ஆசைகள்
எத்தனை கனவுகள்
எப்படி மறக்கும்
அந்த நினைவுகள்
இனத்தை அழித்த 83.யில்
இயக்கத்தில் இணைந்தாய்
அந்த ஆண்டில்
மனித மிருகங்கள்
தமிழனை அழித்த
அந்த ஆண்டில்
அண்ணன் அணியில்
ஒருவனாய் வந்தாய்
தந்தை நீதியாளர்
தனையன் நீயோ போர்ப் பணியில்
வசதியான குடும்பம்
என்றாலும்
தமிழன் வாழ்வுக்காய்
உனை இணைத்தாய்
ஹாட்லிக் கல்லூரியில்
படிப்பை நிறுத்தி
போர்ப் பரணியின்
புதிய ஒருவனாய்
புலித் தலைவனின்
கரம் பிடித்து
இனத்தின் விடுதலையை
இதயத்தில் ஏற்று
இந்திய மண்ணில்
நான்காம் அணியில்
பயிற்சியைப் பெற்றாய் .
1985.யில் இயக்கத்தின் வளர்ச்சிக்காய்
அரசியல் பணியேற்று
திருகோணமலை நகரில்
மூதூர் பகுதியிலே
மடித்துக் கட்டிய சாரமும்
மறைத்து வைத்த ஆயுதமும்
மிதித்து ஓடும் வண்டியுமாய்
நடந்து திரிந்ததும்.
போர்விதைகள் விதைத்து
புதியவர்கள் தனை சேர்த்து
மக்களுடன் வாழ்ந்து
மகத்தான பணி செய்தாய் .
காந்தி நாட்டுப் படைகள்
இங்குவந்து
சொந்த இனத்தின்
துரோகிகள் உடன் சேர்ந்து
தேசியம் பேசும்
சிறு நரிகளுடன்
மாற்று இயக்கத்தின்
மந்தைகளுடன் மது அருந்தி
கன்னித் தமிழினத்தை
கற்பழித்து கொலை செய்து
கொள்ளை அடித்து
குதூகலித்த வேளையிலே
தலைவனுடன் கரம் சேர்த்து
தளராமல் தோள் நிமிர்த்தி
சுடுபடைக்கலம் ஏந்தி
சுகந்திரப் போர் நீ செய்தாய் .
இருபத்திநான்கு மணி நேரத்தில்
இயக்கத்தை அழிக்க வந்தவர்கள்
இரண்டு வருடங்கள் ஆகியும்
இயலாமல் போன கதை
எதிர்த்து சமர் புரிந்து
ஈழத்தின் மானத்தை
இமயம்வரை உயர்த்தி நின்ற
வீரத்தின் வடிவத்தை
வேறு எங்கு காணலாம்
ஆயுதம் எடுத்து போர் புரிந்தாய்
அழகாக அரசியல் பணி செய்தாய்
இந்தியர்கள் சென்றவுடன்
யாழ் நகரின்
அரசியல் பொறுப்பை அலங்கரித்தாய்
மக்களும் புலிகளும்
ஒன்றனக் கூறும்
தலைவரின் கூற்றுக்கு
வாகரை மகா நாட்டில்
வடிவம் கொடுத்து
விடுதலைப் புலிகள்
மக்கள் முன்னணியை
மக்களிடம் கொடுத்தாய்
நீதி வழுவா
நிருவாக சேவையை
பொறுப்பு எடுத்து
நீ அதனை
நடத்தி வந்தாய்
தமிழீழத் நீதி துறையின்
சுகிர்தாவைக் மணமுடித்து
சொந்தங்களை சேர்த்து
எழிலான ஒரு மகளை
இனிதாக பெற்றெடுத்தாய்
உன் பெயர் இந்திரன்
போர்க்கலையில் நீயோ தந்திரன்
தடித்த உருவத்தில் கூட நீ
தளர்ராமல் களமாடினாய்
நக்கல் பேச்சும்
நையாண்டி சிரிப்பும்
சுற்றி ஒரு கூட்டம்
உன்னை சூழ்ந்தே இருக்கும்
கதைகள் பேசுதலும்
கவலைகள் மறந்து
சிரித்து மகிழ்தலும்
உனக்கு உரித்தான
உன்னத குணங்கள்
தாயகத்தின் கனவோடு
தாயகம் விட்டு நீ சென்றாய்
உன்னை அறிந்தவர்களுக்கே
உன் உள்ளம் தெரியும்
எத்தனை இன்னல்கள்
எத்தனை துன்பங்கள்
தோழர்கள் இழப்புக்களை
சுமந்த நேரங்கள்
சொந்த வாழ்வில்
நொந்த வேளையில்
எப்படி மறப்பது
எங்கே நினைப்பது
அந்த நினைவுகள்
எப்படி மறக்கும்
அஞ்சாமை அகற்றி
ஆணவம் நீமிர்த்தி
நெஞ்சில் துணிவோடு
நிமிர்ந்த நேரங்கள்
கண்ணீர் சுமந்த
கடந்த நினைவுகள்
உன்னை எண்ணி
உருகும் நண்பர்கள்
தாயக மண்ணிலும்
தவிர்க்கும் உள்ளங்கள்
எண்ணி எண்ணி
இதயம் ஏங்க
மண்ணின் மைந்தனுக்கு
மலர்களை சொரிபோம்.
நன்றி
அன்று ஒன்றாய் இருந்த உறவுகள்

Leave a Tribute

Light a Candle
Lay a Flower
Leave a Note
 
Recent Tributes
February 8, 2018
February 8, 2018
அண்ணா உங்களை நினைக்காத நாள் இல்லை
இன்று எம் வாழ்நில் மறக்க முடியாத நாள் மீன்றும்
எம் முன்னே வர மாட்டீங்களா? உங்கள் பண்பானா
அறிவுரைகளின் படியே நாம் வாழ்கிறோம்.
உங்கள் : அரபாத்,கவிதா.
January 21, 2017
January 21, 2017
We will miss you Indran Anna. You will always be in our thoughts and in our heart. We love you so much for your caring and affection most of all being there when anyone need help.
January 20, 2017
January 20, 2017
Dominic you are ever with your loving wife& daughter and guide them your memories. No death to you Dominic
Recent stories

Invite others to Indran's website:

Invite by email

Post to your timeline